பரங்கிமலை - விமான நிலையம் - சின்னமலை இடையே 2 மாதங்களில் மெட்ரோ ரயில் சோதனை நடத்த திட்டம்

பரங்கிமலை - விமான நிலையம் - சின்னமலை இடையே 2 மாதங்களில் மெட்ரோ ரயில் சோதனை நடத்த திட்டம்
Updated on
1 min read

ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையிலும், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையிலும் 90 சதவீத மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த 2 மாதங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

2-வது நாளில் 40,500 பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு - ஆலந்தூர் வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டிருப்பது மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. 2-வது நாளான நேற்று முன்தினம் கோயம்பேடு ஆலந்தூர் வரையில் மொத்தம் 198 சர்வீஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 40,500 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.10.9 லட்சம் வசூலாகியுள்ளது.

மேலும், பயண அட்டை பெறுவோருக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ரூ.100 முதல் ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பயண அட்டை மூலம் யார்வேண்டுமென்றாலும் பயணம் செய்யலாம்.

தற்போது, நிர்ணயிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, அடுத்த கட்டமாக சின்னமலை - விமான நிலையம் (9 கி.மீ.), ஆலந்தூர் - பரங்கிமலை (1 கி.மீ.) இடையே இறுதிக் கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் இதுவரையில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்ற னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in