பாரதியார் பல்கலை ஆசிரியர் மீது ஆய்வு மாணவி பாலியல் புகார்: துணைவேந்தர், துறைத் தலைவர் மறுப்பு

பாரதியார் பல்கலை ஆசிரியர் மீது ஆய்வு மாணவி பாலியல் புகார்: துணைவேந்தர், துறைத் தலைவர் மறுப்பு
Updated on
1 min read

கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் மீது ஆய்வு மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை அருகே உள்ள சித்தா புதூரைச் சேர்ந்தவர் அனிதா ராஜன். கணவரை இழந்த இவர், தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது ஆராய்ச் சிப் படிப்பை முடிக்க, துறைத் தலை வரும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான சரவணசெல்வன் என்பவர் பாலியல்ரீதியான நிர்பந் தங்கள் கொடுப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் அனிதா ராஜன் அனுப்பியுள்ளார். நேற்று இந்த புகார் விசாரணைக்காக பேரூர் காவல் உதவி ஆய்வாளர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள் ளது. புகார் அளிக்க வந்த அனிதா ராஜன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘பாரதியார் பல்கலைக்கழகத் தில் முழுநேர ஆங்கில முனைவர் படிப்புக்கு 2010-ல் பதிவு செய் தேன். உடல்நிலை பாதிக்கப்பட்ட தால் படிப்பை சரியாகத் தொடர முடியவில்லை

ஆராய்ச்சிப் படிப்பை 2014-ல் மீண்டும் தொடங்கினேன். இந்நிலை யில் ஆங்கிலத் துறைத் தலைவரும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான சரவணசெல்வன் பாலியல்ரீதியான நிர்பந்தங்களைக் கொடுத்தார். மேலும் லட்சக் கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பல போராட்டங்களுக்கு மத்தியில் 2015, மார்ச்சில் ஆராய்ச்சிப் படிப்பை தொடர அனுமதிக் கடிதம் கிடைத்தது.

ஆனால், ஆராய்ச்சி சுருக்கம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச் சினையில், வருகைப் பதிவு ஆதாரங் களை கொடுக்க அவர் மேற்கண்ட நிர்பந்தங்களையே என் முன் வைக்கிறார். ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் பெண்களுக்கு இதுபோல ஏராளமான கொடுமைகள் நடக் கின்றன. அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இந்தப் புகார் குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறும்போது, ‘சிண்டிகேட் உறுப்பினர்கள் தலைமையில் துறைத் தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து விசாரிக்கப்பட்டதில், இந்தப் புகார் பொய்யானது என்று தெரியவந்தது’ என்றார்.

இந்தப் புகாரில் தொடர்புடைய துறைத் தலைவர் சரவணசெல்வ னிடம் கேட்டபோது, ‘ஊடகங் கள்தான் என் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை சுமத்துகின் றன’ என்றார்.

அனிதா ராஜன் இந்தப் பல் கலைக்கழகத்தில் கடந்த 2009-ல் முதுகலை ஆங்கில மொழியிய லில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in