Published : 24 Jul 2015 07:57 AM
Last Updated : 24 Jul 2015 07:57 AM

தங்கம் விலை உயர்வு பவுன் ரூ.19,040

ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.22-ம், பவுனுக்கு ரூ.176-ம் உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.19,040-க்கு விற்பனையானது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,358-க்கும் ஒரு பவுன் ரூ.18,864-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், நேற்று காலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ. 2,375-ஐ எட்டியது. பவுன் ரூ.136 உயர்ந்து ரூ.19,000-க்கு விற்பனையானது.

மாலையில் விலை மேலும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.5 என பவுனுக்கு ரூ.40 உயர்ந்தது.

இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.2,380-க்கும் ஒரு பவுன் ரூ.19,040-க்கும் விற்பனையானது.24 கேரட் சுத்த தங்கம் (10 கிராம்) நேற்று முன்தினம் ரூ.25,300-க்கு விற் பனையானது. இதன் விலை நேற்று காலை ரூ.60 உயர்ந்ததால், ரூ.20,360-க்கும், மாலையில் மேலும் ரூ.70 உயர்ந்து ரூ. 20,430-க்கு விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x