இளைய தலைமுறையை காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

இளைய தலைமுறையை காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
Updated on
1 min read

இளைய தலைமுறையைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தனது பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள் ளார்.

கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள அண்ணா நினை விடத்திலும், கம்பர், இளங் கோவடிகள், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், வீரமாமுனிவர் சிலைகளுக்கும் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வெற்றித் தமிழர் பேரவையின் அமைப்பா ளர்களும் உடனிருந்தனர்.

பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வைர முத்து வாழ்த்து பெற்றார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக தலைமைக் கழக செய லாளர் துரைமுருகன், நடிகர் பாண்டியராஜன், முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் உள்ளிட்ட பலர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கவிஞர் வைரமுத்து கூறும்போது, “தலையைக் காக்க தலைக்கவசம் அணி யுங்கள். இளைய தலைமுறை யைக் காக்க மதுக்கடையை மூடுங்கள். இதுதான் என் பிறந்தநாள் வேண்டுகோள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in