

ஆம்பூர், வாணியம்பாடி பகுதி களில் காலம் தாழ்ந்து 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
ஆம்பூர் அடுத்த விண்ணமங்க லம் பகுதியில் பாஜக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இதில் கலந்துகொள்ள அக்கட்சி யின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் முதல் நாள் இரவே ஆம்பூர் வந்து அங்குள்ள ஒட்டலில் தங்கினார்.
இந்நிலையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்களை வானதி சீனிவாசன் சந்தித்தார். அப்போது ஆம்பூர் கலவரம் குறித்து அவர் பேச முயன்றார்.
இதையறிந்த ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சி தலைவர்களுக்கு இங்கு பேச அனுமதியில்லை. மேலும், அரசியல் கூட்டம் நடத்த வும் அனுமதியில்லை என்றனர்.
இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய வானதி சீனிவாசன் ரயில் மூலம் சென்னை செல்ல, ஆம்பூர் ரயில் நிலையம் வந்தார். அப்போது அவரிடம் பேட்டி கேட்க முயன்ற நிருபர்களிடம், ஆம்பூரில்தான் பேட்டி அளிக் கக்கூடாது என தடை உள்ளது. ரயிலில் பேசலாம் வாங்க என நிருபர்களை அழைத்தார்.
இதையடுத்து கோயம்பத் தூரில் இருந்து சென்னை நோக்கிச்செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக பிரமுகர்கள் ஏறினர். அதேபெட்டியில் நிருபர் களும் ஏறினர்.
ஓடும் ரயிலில் செய்தியாளர் களிடம் வானதி சீனிவாசன் கூறும் போது, ‘‘ஆம்பூர் மற்றும் வாணியம் பாடி பகுதிகளில் காலம் தாழ்ந்து 144 தடை விதித்தது ஏன்? இதை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அதேசமயம் ஆம்பூர் கலவர விவகாரத்தில் பிற கட்சிகள் மவுனம் கலைக்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டுக்காகவா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என புரியவில்லை. ஆம்பூர் எம்எல்ஏ அஸ்லாம் பாஷா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன்? கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.