Published : 24 Jul 2015 08:19 AM
Last Updated : 24 Jul 2015 08:19 AM

மதுரைக்கு ஆகஸ்ட் 6-ல் அமித்ஷா வருகை: தமிழிசை தகவல்

பாஜக தலைவர் அமித்ஷா ஆகஸ்ட் 6-ம் தேதி மதுரைக்கு வரவுள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

பாஜக அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, கடந்த 15-ம் தேதி விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இருந்ததால் இந்நிகழ்ச்சிக்கு அவரால் வர முடியவில்லை.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி அமித்ஷா மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் தென் தமிழக பாஜக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகிறார். பின்னர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.

மதுரையில் இருந்து 7-ம் தேதி புதுச்சேரி செல்லும் அமித்ஷா, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x