

சன் குழும தொலைக் காட்சி, பண்பலைவானொலிகளை முடக்க மத்திய அரசு முயற்சிப் பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஜனநாயகமும், கருத்துச் சுதந்திரமும் காக்கப்பட வேண்டு மானால் ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரத்தை பறிக்க யார் முயன்றாலும் அது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செய லாகும்.
சன் டிவி நிறுவனம் மீது பொரு ளாதார குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி அந்நிறு வனத்தை முடக்க முயற்சிப் பதை ஏற்க முடியாது. சன் டிவி நிறுவனம் மீதான குற்றச் சாட்டுகள் விசாரணையில் உள்ளன. தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் பண்பலை வானொலி ஏலத்தில் பங்கேற்க சன் டிவி நிறுவனத்துக்கு தடை விதித்திருப்பது மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.
எனவே, சன் டிவி மீதான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை சன் தொலைக்காட்சி, வானொலிகள் முடக்கக் கூடாது என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.