

பத்து அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆகஸ்ட் 11-ல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தி.விஸ்வ நாதன் ’தி இந்து’விடம் கூறிய தாவது: பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். காலியாக உள்ள 500 பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது தற்காலிகப் பணியில் உள்ள 250 பேருக்கு அதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் ஒரே மாதிரியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் பணி செய் தால் தொழிலாளர் நலச் சட்டப்படி இரட்டை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
விசைத்தறி துணிகளை விசைத் தறியாளர்களிடமே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அடுத்த கட்டமாக செப்டம்பர் 2-ல் தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.