குப்பை கொட்டுவதில் புதிய நடைமுறை: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு

குப்பை கொட்டுவதில் புதிய நடைமுறை: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு
Updated on
1 min read

குப்பை கொட்டுவது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் அறிவித்திருந்த புதிய நடைமுறைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர்.

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் குப்பை கொட்டுவதில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட் டது. அதன்படி, கடைகளில் உருவாகும் காய்கறி கழிவுகளை கடைக்காரர்கள் சேகரித்து வைத்துக்கொண்டு, அப்பகுதிக்கு துப்புரவு பணி யாளர் வரும்போது அவரிடம் வழங்க வேண்டும். குப்பைகளை வேறு எங்காவது கொட்டினால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்கெட் நிர்வாகக் குழு எச்சரித்தது.

இது தொடர்பாக காய்கறி வியாபாரி ஒருவர் கூறும்போது, “அழுகிய காய்கறிகளை, கடை களில் சேமித்து வைக்க முடி யாது. வெளியில்தான் கொட்ட முடியும். அதற்கான ஏற்பாட்டை மார்க்கெட் நிர்வாகம் செய்ய வேண்டும். புதிய நடைமுறை சாத்தியமற்றது. இது தொடர்பாக மார்க் கெட் நிர்வாகத்திடம் தெரிவித் திருக்கிறோம்” என்றார்.

புதிய நடைமுறைக்கு வியாபாரிகளிடம் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, மார்க்கெட் நிர்வாகம் சார்பில், தற்போது 11 இடங்களில் 12 டன் கொள்ளளவு கொண்ட புதிய குப்பைத் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in