திமுக வேட்பாளரை தோற்கடியுங்கள்: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுரை

திமுக வேட்பாளரை தோற்கடியுங்கள்: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுரை
Updated on
1 min read

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளரின் உறவினர் மறைவை ஒட்டி ஆறுதல் சொல்வதற்காக உசிலம்பட்டி சென்றிருந்தார் அழகிரி. அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸார் மனம் வருந்தி வருவார்களேயானால், அவர்களை திமுக ஆதரிக்கும் என்று சென்னையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.

இது குறித்து அழகிரி கூறுகையில், தான் ஒரு போதும் காங்கிரஸ் கூட்டணிக்கோ இல்லை வேறு எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கவோ முற்பட்டதில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in