Published : 15 Jul 2015 07:52 AM
Last Updated : 15 Jul 2015 07:52 AM

இறுதிகட்டத்தில் ஆதார் எண் சேர்க்கும் பணி: இணை தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு - காஞ்சி மாவட்டத்தில் 2 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்தனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடை பெற்று வரும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்களை சேர்க்கும் பணியை இணை தலைமை தேர்தல் அலுவலர் சிவஞானம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆதார் எண் விவரங்களை சேர்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகவரி மாற்றம், இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 லட்சம் வாக்காளர்கள் இடம் பெயர்ந் துள்ளதாக, வாக்கு சாவடிநிலை அலுவலர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில், இணை தலைமை தேர்தல் அலுவலர் சிவஞானம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இடம் பெயர்தல், இறப்பு தொடர்பாக சேகரிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்த அவர், இந்த விவரங்கள் சரியாக உள்ளனவா என மீண்டும் நேரில் சென்று விசாரிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அவ்வாறு நேரில் செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விவரங் களை பதிவு செய்ய முடியவில்லை எனில், அத்தகைய தகவல்களை தனி பட்டியலாக தயாரித்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும், சம்பந்தப் பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் சண்முகம், கோட்டாட்சியர் சிவருத்ரய்யா, தேர்தல் பிரிவின் நேர்முக உதவியாளர் அங்கையர்கன்னி, காஞ்சி புரம் வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி யுள்ளது. இது தொடர்பான ஆய்வுகளை அனைத்து பகுதிகளிலும் மேற் கொண்டு வருகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பணிகள் முடி வடையும் நிலை உள்ளன’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் அட்டை விவரங்களில் முரண்பாடு உள்ளதாக 7 ஆயிரம் பேர் கண்ட றியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x