நீதிமன்ற உத்தரவையடுத்து இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்துசெல்கின்றனர். ஆனால், இதுபோன்ற நடைமுறைகளில் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீஸாரில் இருவர் ஹெல்மெட் அணியாமல், சாவகாசமாக பேசிக்கொண்டே நேற்று, இருசக்கர வாகனத்தில் திருச்சி கிராப்பட்டி பாலத்தைக் கடந்து சென்றனர். சட்டம் சாமானிய மக்களுக்கு மட்டும்தானா?