

யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத்தக்கது.
யாகூப் மேனனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: அவரது கடைசி மனுவை உச்சநீதிமன்றம் ஆழ்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.
தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி" எனத் தெரிவித்துள்ளார்.