

குண்டும் குழியுமான கோயம்பேடு - வானகரம் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட முயன்ற பொது நலச் சங்கங்களைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2009 -ம் ஆண்டு, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையான பூந்தமல்லி நெடுஞ் சாலை பகுதியில் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது. மிகப் பெரிய தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இத்திட்டம் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து பறக்கும் சாலை திட்டம் காரணமாக் கோயம்பேடு - வானகரம் சாலையின் பெரும்பகுதி குண்டும், குழியுமாக உருமாறி, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் மிக மோசமான நிலைக்கு உள்ளானது.
இதனால், இந்தச் சாலையில் நாள்தோறும் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள் ளாகி வருகின்றனர். இது குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரி களிடம் பொதுமக்கள் தரப்பில் முறையிட்டும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் நொந்துப் போன பொதுநலச் சங்கங்களைச் சேர்ந்தோர், கோயம்பேடு முதல் வானகரம் வரையில் உள்ள் சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
அதன்படி, மதுரவாயல் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு இயக்கம், மதுரவாயல் நடைப்பயிற்சி சங்கம், வானகரம், மதுரவாயல், நெற்குன் றம், கோயம்பேடு பகுதிகளைச் சேர்ந்த அனைத்து வியாபாரிகள் நலச் சங்கங்கள், அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் ஆகியவைகளைச் சேர்ந்தவர்கள் சாலை அமைப்பதற்கு தேவையான ஜல்லி, மணல், தார் கலவை ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
நேற்று காலை இவர்கள் பூந்த மல்லி நெடுஞ்சாலையில் மதுர வாயல் காவல் நிலையம் அருகே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பொக்லைன், லாரியுடன் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொதுநலச் சங்கங் களைச் சேர்ந்தவர்கள் சாலை போடுவதற்காக சாலை ஓரத்தில் குவித்து வைத்திருந்த ஜல்லி, மணல், தார் கலவையினை அகற் றினர்.
இதுதொடர்பாக பொதுநலச் சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட முயன்றதாகக் கூறி, சாலை அமைக் கும் பணியில் ஈடுபட முயன்ற பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் 29 பேரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 29 பேரும் தனியார் திருமணமண்ட பத்தில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடை பெற்றது. அந்த பேச்சுவார்த்தை யில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ’கோயம்பேடு -வான கரம் வரை உள்ள சாலை புதிதாக அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டு, இன்னும் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும்’ என உறுதியளித்ததாக தெரியவந்துள் ளது.
அதே நேரத்தில், அதிகாரிகளின் உறுதியளித்தபடி ஜூலை 30-க் குள் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாவிட்டால், ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரவாயல் பகுதியில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பொதுநலச் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.