

தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், சிறுபான்மையினர் நல ஆணையருமான எ.முகமது அஸ்லம் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
தமிழக அரசுப் பணியில் முகமது அஸ்லம் 1987-ம் ஆண்டு சேர்ந்தார். துணை ஆட்சியராகப் பணியாற்றிவந்த அவருக்கு 1999-ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது. விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றி னார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது உடல் நந்தனத்தில் உள்ள தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி முகமது அஸ்லம் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.