பொறியியல் கலந்தாய்வு: 25 தனியார் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை

பொறியியல் கலந்தாய்வு: 25 தனியார் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை
Updated on
1 min read

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கி 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், 25 கல்லூரிகளில் இன்னும் ஒரு இடம்கூட நிரம்பவில்லை.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் நடந்து வருகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. தினமும் சுமார் 6 ஆயிரம் மாண வர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், சராசரியாக தினமும் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்தாய்வுக்கு வருவதில்லை. 15-வது நாளான நேற்று முன்தினம் (புதன்கிழமை) அதிகபட்சமாக 2,093 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.

அண்ணா பல்கலைக்கழக கல் லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சென்னையை சுற்றியுள்ள முக்கியமான கல்லூரி களில் கிட்டதட்ட அனைத்து இடங் களும் நிரம்பிவிட்டன. அதேநேரத் தில், கலந்தாய்வு தொடங்கி 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், 25 தனியார் கல்லூரிகளில் ஒருஇடம் கூட நிரம்பவில்லை.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் விளம்பர நோட்டீஸ் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக நுழைவுவாயில் பகுதியிலும், அருகே உள்ள பஸ் நிறுத்தத் திலும் மாணவர்கள், பெற்றோ ரிடம் தனியார் கல்லூரிகள் சார்பில் விளம்பர நோட்டீஸ் விநியோகிக் கப்படுகிறது. நோட்டீஸ் கொடுப் பதோடு, தங்களது கல்லூரியி லேயே சேருமாறும், சேர்ந்தால் என்னென்ன சலுகைகள் கிடைக் கும் என்பதையும் சொல்லி கல்லூரி ஊழியர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in