

2016-ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தியாவில் 3 மாநிலங்களில் 8 கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இவர்கள் மீது ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூற முடியுமா?. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டு காரணாமாக பதவியை இழக்க நேர்ந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளன.
இந்தக் கட்சிகளை எதிர்த்து வரும் 20-ம் தேதி மதிமுக, விடு தலைச் சிறுத்தைகள் போன்ற ஜனநாயகக் கட்சிகளுடன் இடது சாரிக் கட்சிகளும் இணைந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளன. தமிழகத்தில் 93 சதவீத மக்கள் வாழ வழியின்றி கூலித்தொழிலாளர்களாக வேலை செய்வதாக மத்திய அரசு வெளியிட்ட சாதி வாரியான பொருளாதார கணக்கெடுப்பின் புள்ளி விவரப் பட்டியல் கூறுகிறது.
வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 2016-ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும். மக்களுக்கான பிரச்சினை களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வரு கிறது. இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.