

நீதிமன்ற அறையில் நீதிபதி முன்பாக காவல் ஆய்வாளரை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்டித்துள்ள நீதித்துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள், நீதிமன்றம் முன்பு திரண்டனர். அவர்களில் சிலர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து அங்கிருந்த காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த நீதிபதி ஜஸ்டின் டேவிட், வழக்கறிஞர்களை கண்டித்தார். காவல் உயர் அதிகாரி களும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜும் வழக்கறி ஞர்களை சமாதானப்படுத்தினர். காவல் ஆய்வாளர் மன்னிப்புக் கடிதம் கொடுத்த பிறகே பிரச்சினை முடிவுக்கு வந்தது. வழக்கறிஞர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்தை நீதித் துறையைச் சேர்ந்த பலர் கண்டித் துள்ளனர்.
ஜூடிசியல் அகாடமி முன்னாள் கூடுதல் இயக்குநர் நீதிபதி வி.ராமலிங்கம்:
காவல் ஆய்வாளர் மீது ஏதாவது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து நீதிமன்ற அைறக்குள் நுழைந்து நீதிபதி முன்பாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு.
நீதிமன்றப் பணியாளர்கள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் நீதிமன்றத்துக்குத்தான் விசுவாச மாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட நபருக்கு விசுவாசமாக இருக்கக்கூடாது. மேலும் இந்த விவகாரத்தில், ஆய்வாளரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதும் பெரிய தவறு. இதற்கு காரணமானவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு முன்னாள் நீதிபதி:
இத்தகைய கலாச்சாரம் கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதி மன்றம் வழிகாட்ட வேண்டும். உண்மை கண்டறியும் குழு அமைத்து, இந்த சம்பவத்தின் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். அதன்பின்னர் சம்பந் தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் கே.ஆர்.தமிழ்மணி:
இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே 6 முறை நடந்துள்ளது. காவல்துறையினர் மன்னிப்புக் கடிதம் வாங்கினால் கண்டிக்கிறார்கள். வழக்கறிஞர்கள் மட்டும் அதுபோல செய்யலாமா? நீதிபதி இருக்கும்போதே நீதிமன்ற அறைக்குள் நுழைந்து காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சரியல்ல.
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்:
காவல் ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஒன்று சேருவது ஏற்புடையது அல்ல. இது முழுக்க முழுக்க அநாகரீகமான செயல். சமீபகாலமாக வழக்கறிஞர்கள் இப்படி நடந்து கொள்வது அதிகரித் துள்ளது. ஒருவரை தாக்குவதற்கு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் இல்லை. நீதியை காப்பாற்றி சட்டப்படி நடப்பதுதான் வழக் கறிஞர்களின் கடமை.
நான்கூட அரசியல்வாதிகளால் தாக்குதலுக்கு ஆளானேன். அதற் காக பதிலுக்கு 10 ரவுடிகளை அழைத்துக் கொண்டு போய் நான் தாக்குதல் நடத்தவில்லை. சட்டரீதியாகத்தான் என் பிரச்சி னையை எதிர்கொண்டேன். எனவே, வழக்கறிஞர்கள் எந்தப் பிரச்சினையையும் சட்ட ரீதியாக அணுகுவதுதான் சரியாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.