ஜெயலலிதாவின் உடல்நலத்தைப் பற்றி பேசினால் நாக்கை அறுத்து விடுவேன்: அதிமுக எம்.பி. பேச்சு

ஜெயலலிதாவின் உடல்நலத்தைப் பற்றி பேசினால்  நாக்கை அறுத்து விடுவேன்: அதிமுக எம்.பி. பேச்சு
Updated on
1 min read

நாமக்கல் மக்களவை தொகுதி அதிமுக எம்.பி., பி.ஆர். சுந்தரம், நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது "முதல்வரின் உடல் நலம் பற்றி பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்" என்றார்.

நேற்று இரவு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாமக்கல் தொகுதி அதிமுக எம்.பி. பி.ஆர். சுந்தரம், பேசும்போது ஒரு கணத்தில், “அம்மாவின் உடல் நலம் பற்றி யாரேனும் பேசினால் அவரது நாக்கை அறுத்து விடுவேன்” என்றார்.

இதனை அவர் கூறும்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் பேசும்போது, “தமிழகம் முதல்வர் இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. அவர் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை, காரணம் அவர் உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும்” என்றார்.

இப்தார் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் காரணமாக கலந்து கொள்ளாததை அடுத்து திமுக தலைவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஜெயலலிதாவின் உடல்நலம் ‘கவலையளிப்பதாக’ தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் அதிமுக எம்.பி. சுந்தரம் முதல்வரின் உடல் நலம் பற்றி பேசினால் நாக்கை அறுத்து விடுவேன் என்று பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in