

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாகையில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு செல்லாது. மேலும், இன்று காலை 8 மணிக்கு மீனவர்கள் பங்கேற்கும் மவுன ஊர்வலமும் நடைபெறுகிறது.