கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆக்கலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆக்கலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

தமிழக அரசு ஒத்துழைத்தால் கிழக்கு கடற்கரைச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப் படுத்தி தேசிய நெடுஞ்சாலை யாக மாற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். கிழக்கு கடற்கரைச் சாலை அகலப்படுத்தப்பட்டால் கடற் கரையோர மாவட்டங்கள் பயன்பெறும். சுற்றுலாத் துறையும் வளர்ச்சி அடையும்.

சாலை போக்குவரத்து, கிராமங்களின் வளர்ச்சிக் காகவே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என எதிர்க் கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சாரம் செய்கின்றன. யாருடைய நிலம் கையகப் படுத்தப்படுகிறதோ அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். நிலத்தின் மதிப்பைவிட 4 மடங்கு அதிக விலை கொடுக்கப்படும். மத்திய அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வந்தாலும் இதை செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடமே இருக்கும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மேல்முறையீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in