

சென்னை - கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.
ஐயப்பன்தாங்கலில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் 37ஜி பேருந்து, கோடம்பாக்கத்தின் ரங்கராஜபுரத்தின் மேம்பாலச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காயமடைந்த 15 பேர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.