

கிரானைட் முறைகேடு தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட நடவடிக் கைகள் குறித்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரணை நடத்தினார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் விசா ரணை நடத்தி வருகிறார். இறுதி அறிக்கையில் சேர்ப்பதற்காக பல்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகும்படி சகாயம் சம்மன் அனுப்பி வருகிறார். நேற்று முன்தினம் ஆஜராகும்படி மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் கால அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பினார்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் விஜயேந்திர பிதாரி நேற்று ஆஜரானார். அவருடன் கூடுதல் கண்காணிப்பாளர் மாரியப்பன் வந்திருந்தார். ஏராளமான ஆவணங் களை சகாயத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த விசா ரணையில் சகாயத்தின் பல்வேறு கேள்விளுக்கு கண்காணிப்பாளர் பதில் அளித்தார். கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது புகார்கள் அளித்தும் 2012-ம் ஆண்டு வரை நடவடிக்கை எடுக்கா தது ஏன்? குவாரிகளில் இறந்தவர் களைப் பற்றிய விவரங்கள், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட வழக்கு விவரங்கள் போன்ற வற்றை சகாயம் கேட்டறிந்தார். சகாயத்திடம் புகார் அளித்தவர் களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டார்.
இதுகுறித்து கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கூறும்போது, ‘கிரானைட் முறைகேடு குறித்து, சகாயம் கேட்ட வழக்கு விவரங் கள் உட்பட பல்வேறு தகவல் களை 25 ஆயிரம் பக்க ஆவணங் களாக ஏற்கெனவே அளித்துள் ளோம். இதில் சில சந்தேகம் இருப்ப தாகவும், கூடுதல் விவரங்களை பெறுவதற்காகவும் சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார். 1,500 பக்க ஆவணங்களை அளித்துள்ளதுடன், நேரிலும் விளக்கம் அளித்துள் ளோம். எங்களிடம் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவே கருது கிறோம்’ என்றார்.