

கொளத்தூர் தொகுதி மக்களுக்குத் தேவையான நலத் திட்ட உதவி களைச் செய்யுமாறு அரசுக்கு உத்தர விடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தாக் கல் செய்த மனுவில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தகுதி யான 406 பேர் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகுதியானவர் களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு கருத்து தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து விசாரணையை 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.