சுங்கச்சாவடிகளில் ‘மின்னணு கட்டண வசூல்’ முறை: சென்னை - பெங்களூர் இடையே இன்று தொடக்கம்

சுங்கச்சாவடிகளில் ‘மின்னணு கட்டண வசூல்’ முறை: சென்னை - பெங்களூர் இடையே இன்று தொடக்கம்
Updated on
1 min read

சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டணம் வசூலிக்கும் முறை சென்னை - பெங்களூர் நெடுஞ் சாலையில் இன்று தொடங்கப் படுகிறது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 184 சங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சுங்கச் சாவடி களின் கட்டுப்பாட்டில், 4,832 கி.மீ., தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை கள் அமைந்து உள்ளன. தமிழகத்தில் தான் அதிகளவில், 42 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஒவ்வொன்றுக்கும், கட்டணங்கள் மாறுபடுகின்றன.

நெடுஞ்சாலைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படு கிறது. வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதிப் படுகிறார்கள். எனவே, கட்டணத்தை எளிமையாக வசூலிக்கும் வகையில் சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை வசூலிக்க ‘மின்னணு கட்டண வசூல் முறையை’ அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. சென்னை பெங்களூர் நெடுஞ்சாலைகளில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சோதனை பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த புதிய திட்டம் இன்று ஸ்ரீபெரும் புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் தொடங்கப் படுகிறது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணத்தை செலுத்திட வாகனங்களை வரிசையில் நிறுத்த வேண்டும். இதனால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கட்டணத்தை வசூலிக்க ‘மின்னணு கட்டணம் வசூல் முறையை’ அமல்படுத்தவுள்ளோம். முதல்கட்டமாக சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் இடைவுள்ள 7 சுங்கச்சாவடிகளில் இந்த வசதி இன்று தொடங்கிவைக்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை கன்னியாகுமரி போன்ற மற்ற நெடுஞ்சாலைகளிலும் இந்த வசதிகள் விரிவுப்படுத்தப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in