

மாதவரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் கள் உட்பட 7 பேர் கைது செய்யப் பட்டனர்.
சென்னை மாதவரம் திடீர் நகர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முரளி(36). பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் காலையில் வீட்டு அரு கிலேயே முரளி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன்(36), ரஞ் சித்(29), பிரபு(27), பிரபாகரன்(35), ரத்தினம்(36), நாகராஜ்(41), ஆரோக்யராஜ்(26) ஆகியோர் சேர்ந்து முரளியை கொலை செய் தது தெரிந்தது. இதில் ரத்தினம், நாகராஜ், ரஞ்சித், தியாகராஜன் ஆகியோர் முரளியின் உறவினர்கள் ஆவர்.
கொலை நடந்த அன்று மாலையே தியாகராஜன், ரஞ்சித், பிரபாகரன், பிரபு ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின்பேரில் ரத்தினம், நாகராஜ், ஆரோக்யராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறும்போது, "விவாகரத்தான ஒரு பெண்ணுடன் முரளிக்கு தவறான தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணின் மகனுக்கும், பிரபாகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பிரபாகரனை மிரட்டிய முரளி, அவரது வீட்டின் முன்பு அடியாட் களையும் நிறுத்தி வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரபா கரன் முரளியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதுபற்றி நண்பர் தியாகராஜனிடம் தெரிவித்தார். மாதவரத்தில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் லோடுமேன்களை வேலைக்கு அனுப்புவது தொடர் பாக தியாகராஜனுக்கும் முரளிக்கும் ஏற்கெனவே தகராறு இருந்தது. எனவே, முரளியை கொலை செய்ய அவரும் ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து தனது நண்பர் களுடன் சேர்ந்து முரளியை வெட் டிக்கொலை செய்துள்ளனர்" என்ற னர்.