

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்க வரும் 6-ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கால் செய லிழந்தோர் மற்றும் காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான நேர்முகத் தேர்வு ஜூலை 6-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் தையல் பயின்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.