

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை ஓஎன்ஜிசி மூலம் மறைமுகமாக செயல் படுத்த முயற்சி நடப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முகநூலில் ஸ்டாலின் நேற்று கூறியிருப்ப தாவது: மீத்தேன் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அரசு அறிவித்தாலும், அத்திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்து வதற்கு வழிவிட்டு அமைதி காக் கிறது. விவசாயிகளுக்கு எதிராக நடைபெறும் எரிவாயு எடுக்கும் பணிகள் குறித்து காவிரி டெல்டா பகுதி அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் மவுனமாகவே இருக் கின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 35 இடங்களில் ஓஎன்ஜிசி மூலம் எரிவாயு எடுக்க நடக்கும் முயற்சி களை அதிமுக அரசு தடுக்க வில்லை.
காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி, மீத்தேன் திட்டத்தை ஓஎன்ஜிசி மூலம் மறைமுகமாக செயல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அதிமுக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், காவிரி டெல்டா பகுதியில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.