ஆம்பூரில் 144 தடை உத்தரவுக்கு எதிர்ப்பு வீடுகளில் கருப்புக் கொடி

ஆம்பூரில் 144 தடை உத்தரவுக்கு எதிர்ப்பு வீடுகளில் கருப்புக் கொடி

Published on

ஆம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடு களில் கருப்புக் கொடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹ்மது போலீஸ் விசாரணையின்போது உயிரிழந் ததைத் தொடர்ந்து ஆம்பூரில் ஜூன் 27-ம் தேதி கலவரம் மூண்டது. அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆம்பூருக்கு வந்து பொதுமக்களை சந்தித்தனர். இதனால், ஆம்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்று கருதி கடந்த 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் வரும் 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்மூலம் ஆம்பூரில் அரசியல் கட்சித் தலைவர்களின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தடை உத்தரவுக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், தடை உத்த ரவைக் கண்டித்து ஆம்பூரை அடுத்த பாரதியார் நகர், சான்றோர் குப்பம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் தங்க ளது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் பகுதி மக்கள் கூறும்போது, ‘கலவரத்துக்கான சூழ்நிலை உருவாகியபோதே தடை உத்தரவு போட்டிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் கலவரம் நடந்து 10 நாட்கள் ஆன பிறகு 144 தடை உத்தரவு போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். சவ ஊர்வலம், கோயில் திருவிழா, சுப விசேஷங்கள் என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் கூட்டமாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீஸார் ரோந்து வருவதால் 4 பேர் ஒன்றாக சேர்ந்து போக முடியவில்லை’என்றனர்.

மேலும் வாணியம்பாடி பகுதி மக்கள் கூறும்போது, ‘ஆம்பூரில் கலவரம் நடந்த தற்கு வாணியம்பாடியிலும் தடை போடப்பட்டுள்ளது கண்டிக் கத்தக்கது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடையை உடனடியாக விலக்க வேண்டும்’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in