மத்திய அரசு திட்டத்துக்கான 7,243 செவிலியர் நியமன தேர்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு திட்டத்துக்கான 7,243 செவிலியர் நியமன தேர்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மத்திய அரசு திட்டத்துக்காக செவிலியரை தேர்வு செய்வதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக அரசு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி செவிலியர் கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “7,243 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஏப்ரல் 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். 58 வயதானவர்களும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தப் பணியிடங்களில் 6,792 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காரணங்களால் மேற்கண்ட அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப் பட்டிருந்தது.

நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இம்மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:-

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, மத்திய அரசு திட்டத்துக்காக செவிலி யர்கள் தேர்வு செய்யப்படு கின்றனர். இதற்கு மத்திய அரசுதான் நிதி உதவி செய்கிறது. ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் செவிலியர்கள், மத்திய அரசு திட்டம் இருக்கும் வரை பணியாற்றலாம். அதன் பிறகு அரசு மருத்துவமனை காலியிடங்களில் சேர்த்துக் கொள் ளப்படுவார்கள். அரசே நேரடியாக தேர்வு நடத்துவதால் இதில் இடைத்தரகர் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

அரசின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது விண்ணப்பித்தவர் களில் 32 வயதுக்கு குறைவானவர் கள்தான் அதிகம். அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

தடை விதிக்க முடியாது

வரப்பெற்ற 40,432 விண்ணப்பங்களில் 1,790 பேர் மட்டுமே ஆண்கள். மார்பகப் புற்றுநோய், பிரசவம் போன்ற பெண்கள் சார்ந்த மருத்துவப் பணிகளுக்காக செவிலியர் தேர்ந்தெடுக்கப்படுவதால்தான் பெண் செவிலியர்களுக்கு முன் னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தவறு இல்லை. எனவே, மத்திய அரசு திட்டத்துக் காக செவிலியர் தேர்ந்தெடுக் கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என்ற தெரிவித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in