Published : 07 Jul 2015 07:46 AM
Last Updated : 07 Jul 2015 07:46 AM

தொழில் அதிபர்களை குறிவைத்து கைவரிசை காட்டிய ‘போலி டிஐஜி’: போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பா?

கோவையில் கைதான போலி டிஐஜி, பல்வேறு இடங்களில் தொடர் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந் துள்ளதால், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

கோவை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதியிடம், டிஐஜி பேசுவதாகக் கூறி ஒரு போலீஸ் படையை துணைக்கு அழைத்துக் கொண்டு வசூலில் ஈடுபட்ட சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சண்முகதுரை (49) என்ற போலி டிஐஜி, மீனாகுமாரி (50) என்ற பெண் ஆகியோர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மோசடி, ஆள்மாறாட்டம், கூட்டுச் சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக, போலீஸ் அதிகாரி களைப் போன்று நடிப்பவர்கள் உண்மையான போலீஸுக்கு அருகில் வராமல் குற்றங்களில் ஈடு படுவார்கள். ஆனால், கோவையில் போலி டிஐஜியாக வலம் வந்து பிடிபட்டவர், பல இடங்களில் உண்மையான போலீஸை துணைக்கு அழைத்துச் சென்று தனியார் நிறுவனங்களில் ‘ரெய்டு’ என்ற பெயரில் பல தொழில் அதிபர்களை கலங்கடித்திருப்பது தெரியவந்துள்ளது.

சண்முகதுரை, பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு 1990 காலகட்டங்களில் போலீஸ் அதிகாரி ஆவதற்கான மத்திய, மாநில தேர்வாணையம் மூலமாக நடத்தப்பட்ட தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இவருடன் படித்த பலர் போலீஸ் அதிகாரிகளாக ஆகிவிட, சண்முகதுரை மட்டும் கடைசி வரை தேர்வில் வெற்றி பெறவில்லை.

தொடக்கத்தில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் சண்முகதுரை இருந்தாலும், சுற்றி இருந்த நண்பர்கள், உறவினர்கள் சிலர் போலீஸாக இருந்ததாலும், அவர்களைப் பார்த்து போலீஸ் போன்று எவ்வாறு அதிகாரத்துடன் நடந்து கொள்வது என்பது அத்துப்படியாக மாறியுள்ளது. இவரது மகள்களில் ஒருவர், போலீஸ் அதிகாரியாக தேர்வாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு, தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவர் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள் ளது. குறிப்பாக, பெரிய நிறுவனங் கள், தங்க நகைக் கடைகள் போன்றவற்றை குறிபார்த்து மத்திய கலால் டிஐஜி, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி என்ற பெயரில் தேவைக்கு ஏற்ப அறிமுகப் படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் கூறும்போது, ‘சண்முகதுரை குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.25 லட்சத்தை மோசடி செய்துள்ளதாக தற்போது புகார் வந்துள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x