உழைக்கும் மக்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது: சிஐடியு தலைவர் புகார்

உழைக்கும் மக்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது: சிஐடியு தலைவர் புகார்
Updated on
1 min read

உழைக்கும் மக்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாக சிஐடியுவின் அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.

சிஐடியு தொழிற்சங்கத்தின் அகில இந்திய நிர்வாகக் குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் நேற்று தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்து ஏ.கே.பத்ம நாபன் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்துவிட் டது. தேர்தல் வாக்குறுதிகள் எதை யும் அவர் நிறைவேற்றவில்லை. பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. ஜாதி, மதம், பாலின அடிப்படையில் நடக்கும் சமூக ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.

லாபம் ஈட்டும் பொதுத்துறை கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. தாராளமய பொருளா தாரக் கொள்கைகள் மிக வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. முதலாளிகளின் நலனுக்காக தொழி லாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடுகிறார்கள். உழைக்கும் மக்களுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுகிறது. எனவே, மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களை நாம் அணி திரட்ட வேண்டும்.

பாஜக அரசு மதவாத செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு நிறுவனங்கள், கல்வி, சமூக நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்புள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டில் சமூக நல்லிணக்கத்துக்காக போராட நாம் உறுதியேற்க வேண்டும்.

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்துக்கான தடையை எதிர்த்து போராடி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் பேசினார்.

சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in