ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை: தேர்வில் தோல்வியால் திருமங்கலம் அருகே பரிதாபம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டனர்.
திருமங்கலம் அருகேயுள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பாரதிநகரை சேர்ந்த முனியப்பன் மகன் சங்கர்பாண்டி (15). அருகிலுள்ள ஏ.தொட்டிய பட்டியைச் சேர்ந்த இருளாண்டி மகன் சஞ்சய்கண்ணன் (15). இருவரும் ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற 9-ம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டனர். எனவே இரு தினங்களுக்கு முன், பள்ளியில் நடைபெற்ற சிறப்பு துணைத் தேர்வில், தோல்வியடைந்த 2 பாடங்களை மீண்டும் எழுதியுள் ளனர். அதற்கான முடிவு இன்னும் வரவில்லை.
இதற்கிடையே, நேற்று முன் தினம் மாலை டியூசனுக்கு சென்ற சங்கர்பாண்டி, சஞ்சய்கண்ணன் ஆகிய இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடு களில் தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. நேற்று அதிகாலை திருமங்கலம்- விருதுநகர் ரயில் வழித்தடத்தில் கரிசல்பட்டி அருகே தண்டவாளத்தில் 2 சிறுவர்களின் உடல்கள் தலையின்றி கிடப்பதாக திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சிறிது தூரத்தில் சங்கரபாண்டியின் தலை கிடந்தது. சஞ்சய்கண்ணன் தலையைக் காணவில்லை. ரயிலின் வேகத்தில் முற்றிலும் தலை முழுவதுமாக சிதைந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் அணிந் திருந்த உடைகளை வைத்து சஞ்சய் கண்ணன் உடலை உறவினர்கள் அடையாளம் கண்டனர்.
இதுபற்றி திருமங்கலம் நகர் வி.ஏ.ஓ. பால்ராஜ் விருதுநகர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, இருவரின் உடல் களையும் மீட்டு, பிரேதப் பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவர்களின் பெற் றோர், நண்பர்கள், பள்ளி நிர்வாகத் தினரிடம் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, இரு மாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும், கடந்த ஒரு வாரமாக ஒரே வகுப்பில் அமர்ந்து பயின்றுள் ளனர். 9-ம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்ததால் இருவருமே அதுபற்றி பேசி வருந்தியுள்ளனர். இச்சூழலில் சஞ்சய்கண்ணன், சங்கர்பாண்டி ஆகிய இருவரும் தண்டவாளத்தில் இறந்து கிடந் தனர். தேர்வில் தோல்வி அடைந்த தால் தற்கொலை செய்துகொண்டி ருக்கலாம் என நினைக்கிறோம். பிரேதப் பரிசோதனை அடிப்படை யில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.
