

சேலம் மாவட்டம், மேட்டூரில் காவிரி யின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக்கானூர் கதவணையின் 3-வது மதகு (ஷெட்டர்) உடைந்து, 6,000 கன அடி (0.5 டி.எம்.சி.) தண்ணீர் வெளியேறியதால், 30 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப் படும் தண்ணீரை சேமித்து திறந்து விடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய நீர்சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக காவிரியின் குறுக்கே 0.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய கதவணை மின் நிலையங்கள் 7 இடங்களில் அமைக் கப்பட்டுள்ளன. கதவணை பகுதி யில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை.
இந்நிலையில், செக்கானூர் கதவணையில் கடந்த 25-ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணி்கள் நடந்தன. மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் 20 பேர் இப்பணி யில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணி முடிந்து கடந்த 11-ம் தேதி முதல் மின் உற்பத்திக்காக கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 3 மணியள வில் செக்கானூர் தடுப்பணையின் 3-வது மதகு (ஷெட்டர்) திடீரென உடைந்து சேமிக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேறத் தொடங் கியது. அதிர்ச்சியடைந்த கத வணை மின்நிலைய அலுவலர்கள் அபாய ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ஆற்றில் மீன்பிடிக்கும் பணியில் இருந்த மீனவர்களை உடனடியாக வெளி யேறச் செய்தனர்.
கதவணையில் தேக்கிய தண் ணீர் முழுவதும் வடிந்த பின்னரே மதகை சீர்செய்யமுடியும் என்ப தால், தண்ணீரை வடியச் செய்யும் நடவடிக்கையில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பராமரிப்பு பணியின்போது, கதவணைகளில் பொருத்தப்பட் டுள்ள, 18 ஷெட்டர்களை சீர்செய்து வர்ணம் பூசவேண்டும். பல ஆண்டு களாக செக்கானூர் கதவணை ஷெட்டர்களுக்கு வர்ணம் பூசா ததால், துருப்பிடித்து பலம் குறைந்ததால் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியதாக தெரிகிறது.