Published : 18 Jun 2015 07:45 AM
Last Updated : 18 Jun 2015 07:45 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறிமுகம்: தேர்தல் முறைகேடு புகார்களை தெரிவிக்க ‘இ-நேத்ரா’திட்டம் - முதல்முறையாக 100 ஜி.பி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

தேர்தல் தொடர்பான புகார்களை ஒருங்கிணைக்கவும், உடனடி தீர்வு காணவும் ‘இ-நேத்ரா முறைமை’ திட்டம் ஆர்.கே.நகர் இடைத்தேர்த லி்ல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

தேர்தலில் வாகனங்கள் மற்றும் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மே 28-ம் தேதி முதல் 6 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், 28 பறக்கும் படைகள், 3 வீடியோ கண்காணி்ப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் வார்டுக்கு 4 கண்காணிப்பு குழுக்கள் வீதம் கண்காணிப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படையினருக்கு வயர் லெஸ் தொடர்பு கருவியுடன் அவர்கள் வாகனங்களில் புவித்தகவல் குறியீட்டு முறை (ஜிபிஎஸ்) சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி நிகழ்வுகள், தேர்தல் பிரச்சாரத்தை கண்காணிக்க இந்தியாவிலேயே முதல்முறையாக 100 இன்டர்நெட் புரோட்டாக்கால் கேமராக்கள் தொகுதியி்ன் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டு தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது.

தேர்தல் தொடர்பான புகார்களை ஒருங்கிணைக்கவும் உடனடி தீர்வு காணவும், ‘இ-நேத்ரா முறைமை’ அறிமுகப்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தர வுப்படி இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி யடைந்தால் அடுத்த தேர்தல்களில் பயன்படுத்தப்படும்.

இம்முறையில், தேர்தல் நடத்தை விதி மீறல், முறைகேடுகள் குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆறு வழிகளில் புகார் அளிக்கலாம். ‘பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்யும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் மூலம் அதில் அளிக்கப்பட்டுள்ள படிவத்தில் புகார் பதிவு செய்யலாம்.

இதுதவிர ‘enetra@chennaicor poration.gov.in’ என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அல்லது 94441 23456 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். 1950 என்ற தொலைபேசி எண்ணை அழைக் கலாம். இது தவிர மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அளிக்கலாம் அல்லது ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் தெரிவிக்கலாம்.

தேர்தல் தொடர்பான புகார்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் பெற வசதியாக முதல்முறையாக ஐவி ஆர் எஸ் (interactive voice response system) முறை செயல் படுத்தப்பட்டுள்ளது. இந்த 6 வகை களிலும் பெறப்படும் புகார்களுக்கு பதிவு எண் அளிக்கப்பட்டு புகார் அளிப்பவருக்கு தெரிவிக்கப்படும். புகார்கள் பெறப்பட்டதும் அதன் தன்மையை பொறுத்து கள ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் பெறப்பட்ட முறையிலேயே புகார் தாரருக்கு 2 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் தகவல் அனுப்பப்படும். பறக்கும் படையினர் மற்றும் நிலைக்குழுவினர் புகார் களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களுக்கு ஜிஎஸ்எம் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முறையில் புகார் அளித்தவர் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படும். அதே நேரம் புகார் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து இணையதளத்தில் பொதுமக்கள் காணும் வகையில் வெளியிடப்படும்.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x