

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, கடந்த பிப். 20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தற்கொலைக்கு தூண்டி யதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் செந்தில் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்தனர்.
பின்னர், அக்ரி கிருஷ்ண மூர்த்தியை ஏப். 4-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவருக்கு ஜூன் 4-ம் தேதி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, மறு உத்தரவு வரும்வரை, சென்னையில் தங்கி, சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதையேற்று, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை முழுமை யாக தளர்த்தி நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.