

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் 150 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு சாலை விபத்துகளை குறைக்க திட்டப்பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 4,974 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 2,724 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள சாலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சாலை விதிகளை பின்பற்றா தது, மது குடித்துவிட்டு வாகனங் களை ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டு வது போன்ற ஓட்டுநர்களின் கவனக்குறைவால்தான் 90 சதவீத
விபத்துகள் நடப்பதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மொத்தம் 67,232 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,176 பேர் இறந்துள்ளனர். சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்திலும், சாலை விபத்து இறப்பில் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையரகத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறோம். ஆய்வில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக மாக சாலை விபத்துகள் நடக்கும் 150 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். இதில் சென்னை – திருச்சி இடையே அதிகமான இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
தேர்வு செய்யப் பட்ட இடங்களில் போதிய சிக்னல்கள் அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் அமைத்தல், பெரிய வளைவுகளை சீராக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். மேலும் அங்கு சர்வீஸ் சாலை களை அமைக்கவும், உள்ளூர் சாலைகளை அகலப்படுத்தவும் மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.