

‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச் சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டு களை கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் களுக்கு பேட்டி அளித்தார். அந்த செய்தி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மறுநாள் வெளியானது.
இது, அமைச்சரின் நற்பெய ருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகக் கூறி அரசு சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் மற்றும் அவரது பேட்டியை வெளியிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி என்.ஆதிநாதன் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன், அச்சிடுபவர் வி.ரவி ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இவ்வழக்கை ரத்து செய்யக் கோரியும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரியும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பதிப்பாளர் என்.ராம், ஆசிரியர் கே.அசோகன், அச்சிடுபவர் வி.ரவி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
ஜனநாயக நாட்டில் பேச்சுரி மையே அடிப்படை. அதன்படி, கருத்து தெரிவிக்கவும் எதிர்க்கவும் உரிமை உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகை கள் திகழ்கின்றன. சில குறிப்பிட்ட பத்திரிகைகளின் வாயை கட்டு வதற்காக இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி, பல்வேறு ஊடகங்களில் வெளியானது. ஆனால், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மீது மட்டும் வழக்கு தொடரப் பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசா ரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ‘தி இந்து’ நாளிதழ் பதிப்பாளர், ஆசிரியர், அச்சிடுபவர் ஆகிய 3 பேரும் இவ் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.
அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.சண்முகவேலாயுதம் ஆஜரா னார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடை பெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பதிப்பாளர், ஆசிரியர், அச்சிடுபவர் ஆகியோர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.