

மதுரவாயலில் பிடிபட்ட வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து 32 பவுன், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை மதுரவாயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் போலீஸார் ரோந்து சுற்றி வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தப்பிச் செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை துரத்திச் சென்று வழிமறித்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சேத்துப்பட்டை சேர்ந்த சதீஷ்குமார், மோகன்குமார் என்பது தெரிந்தது. இருவரும் சேர்ந்து மதுரவாயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறித்ததும், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இருவரிடம் இருந்தும் 32 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்