

டிப்ளமோ, பி.எஸ்சி., படித்தவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக மாநில அளவிலான கலந்தாய்வு தொடங் கியது.
தமிழகத்தில் உள்ள 533 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக 1 லட்சத்து 16 ஆயிரத்து 234 இடங்கள் உள்ளன. இதற்காக காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
விளையாட்டு வீரர்கள், முன் னாள் ராணுவத்தினரின் குழந்தை கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு காலையில் நடைபெற்றது. கெமிக் கல், லெதர், பிரிண்டிங் பாடப் பிரிவுக்கு கலந்தாய்வு மாலையில் நடைபெற்றது. டெக்ஸ்டைல் பாடப் பிரிவுக்கு கலந்தாய்வு இன்று (27-ம் தேதி) காலை 8 மணிக்கு நடை பெறும். ஜூலை 9-ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.
கலந்தாய்வில் கல்லூரியைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை கலந்தாய்வுச் செயலா ளர் அ.மாலா நேற்று வழங்கினார்.