Published : 17 Jun 2015 08:29 AM
Last Updated : 17 Jun 2015 08:29 AM

புதிய அணைகள் கட்டும் விவகாரம்: நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் - விவசாய சங்கங்கள் கோரிக்கை

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப் படும் என கர்நாடக முதல்வர் மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். தமிழக விவசாயி களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார்.

கடந்த 6-ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தோம். புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தவேண்டும் என அவரிடம் வலியுறுத்தினோம்.

இந்நிலையில், 70 டிஎம்சி தண் ணீரைத் தேக்கும் வகையில் காவிரி யின் குறுக்கே 4 அணைகளைக் கட்டுவது தொடர்பாக ஆய் வறிக்கை தயார் செய்துள்ளதாக வும், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெற உள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் தமிழக காவிரி விவசாயி கள் மற்றும் காவிரி நீர் பயன் படுத்தி வரும் 20 மாவட்டங்களில் காவிரி பிரச்சினை முக்கிய பிரச் சினையாக உருவெடுத்து வரு கிறது என்பதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

தற்போதை சூழ்நிலையில் மத்திய அரசு கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்வதோடு, கர்நாடகத்தின் அணை கட்டுமான நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x