

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுகளின் விடுமுறைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1 மற்றும் 2-ம் அமர்வுகள் சென்னை அரும்பாக்கத் தில் செயல்பட்டு வருகின்றன. இவற் றில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுச் சூழல் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அமர்வுகளுக்கு ஜூன் மாதம் முழுவதும் விடுமுறைக் காலமாக அறிவிக்கப்பட்டது.
விடுமுறைக்கால அமர்வு புதுடெல்லியில் உள்ள முதன்மை அமர்வில் செயல்பட்டு வந்தது. அவசர வழக்குகளை அங்கு தொடரலாம். ஏற்கெனவே நடை பெற்று வரும் வழக்கு தொடர்பாக அவசரம் கருதி விசாரிக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.