

சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் செலவினப் பார்வையாளராக ராகுல் ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
''சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியின் செலவினப் பார்வையாளராக ராகுல் ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படை வரவழைக்கப்படும். ஆர்.கே நகர் தொகுதியில் பறக்கும் படைகள் மூலம் வாகன சோதனை நடத்தப்படுகிறது'' என்று சந்தீப் சக்சேனா பேசினார்.