

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 181-வது வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 74.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடர்பான ஆவணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர், தேர்தல் பார்வையாளர் ஜோதி கலஷ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், 181-வது வாக்குச் சாவடியில் நடந்த வாக்குப்பதிவில் குழப்பம் ஏற்பட்டிருப்பது கண்ட றியப்பட்டது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரி கருத்து
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது, 181-வது வாக்குச்சாவடியில், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத சிலரை வாக்களிக்க வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் அனுமதித் ததாக தேர்தல் ஆணையத்திடம் பார்வையாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படி, 181-வது வாக்குச்சாவடியில் 27-ம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதிய வாக்குப்பதிவு இயந்திரம்
தேர்தல் ஆணைய உத்தரவுப் படி அந்த வாக்குச்சாவடியில் 29-ம் தேதி (இன்று) காலை 8 முதல் 5 மணி வரை மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந் திரம் பயன்படுத்தப்படும். வாக் காளரின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தேர்தல் ஆணையம் குறிப்பிட் டுள்ள வாக்குச்சாவடி எண் 181, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை யில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந் துள்ளது. இதில், திருநாவுக்கரசு தோட்டம் 2-வது தெருவைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். இந்த வாக்குச்சாவடி யில் 219 ஆண்கள், 204 பெண்கள் என மொத்தம் 423 வாக்காளர்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவின்போது, வாக்காளர் எண்ணிக்கையைவிட கூடுதலாக வாக்குகள் பதிவா னதால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.