

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களுக் கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட எட்டு வார்டுகளில் 230 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற் றுக்கு 230 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பழுதானால் மாற்றுவதற்கு கூடுதல் இயந் திரங்கள் என 750-க்கும் மேற் பட்ட இயந்திரங்கள் தேவைப் படும். இந்த இயந்திரங்கள் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.
சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர் தலைமையில், தேர்தல் துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதில் வாக்குப்பதிவு மையங் களுக்கு தேவையான இயந்திரங் கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.