

மருத்துவம், பொறியியல் உள் ளிட்ட தொழில்கல்வி படிப்புக ளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில், சட்டப் படிப்புக்கு இன்னும் விண்ணப்பமே வழங்கப் படாததால் மாணவர்கள் குழப் பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு பிஏ, எல்எல்பி ஆனர்ஸ் படிப்புக்கு மே 8-ம் தேதி முதலும், அதேபோல் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு எல்எல்பி படிப்புக்கு மே 14-ந் தேதி முதலும், 3 ஆண்டு படிப்புக்கு மே 25-ம் தேதியில் இருந்தும் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கடந்த மே 3-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அறிவிக்கப்பட்டபடி, மே 8-ம் தேதி 5 ஆண்டு கால பிஏ,எல்எல்பி ஆனர்ஸ் படிப் புக்கு விண்ணப்பம் வழங்கப்பட வில்லை.
அன்றைய தினம் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆசை யோடு விண்ணப்பம் வாங்க வந்த மாணவ-மாணவிகளும், பெற்றோ ரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதே நிலை தொடர்ந்தது.அதன்பின்னரே “விண்ணப் பம் வழங்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்” என்று அறிவிக் கப்பட்டது. அதுதொடர்பான அறிவிப்பும் சட்டப் பல்கலைக் கழக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது.
இருப்பினும், விண்ணப்பம் வாங்க மாணவர்கள் வருவதும் அந்த அறிவிப்பை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புவதும் தினசரி தொடர்கிறது. இந்த பரிதாப நிலையை நேற்றுகூட பார்க்க முடிந்தது.
சட்டப் படிப்பு மாணவர் சேர்க் கைக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காததே விண்ணப்பம் வழங்க காலதாமதமாகி வருகிறது என்று பல்கலைக்கழகம் தரப் பில் சொல்லப்பட்டாலும், பாதிக் கப்படுபவர்கள் மாணவர்கள்தான். இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பங்களை விநியோகிக்க வேண்டும் என்று சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.