

காஞ்சிபுரத்தில் தனியார் பேக்கரி மற்றும் பழங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நகராட்சி நகர்நல அலுவலர் கே.என்.ஜெயசந்திரன், சுகாதார ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு நடத்தினர்.
இதில் கால்ஷியம் கார்பைடு கல்லை பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து செயற்கையாக பழுக்க வைக்கப் பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்களை சுகாதார அலுவ லர்கள் பறிமுதல் செய்தனர். பேக்கரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.