

அனைவருக்கும் கல்வி இயக்ககம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கு (2015-16) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் கற்றல்திறன் குறித்த கலந்துரையாடல் தொடர்பான 3 நாள் மாநில அளவிலான பயிற்சி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான பயிற்சி 16, 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், அதன்பிறகு குறுவள மைய அளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 20-ம் தேதியும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 27-ம் தேதியும் நடத்தப்படும்.