மக்களை பாதிக்கும் பல மசோதாக்களை பாஜகவுடன் சேர்ந்தே காங்கிரஸ் நிறைவேற்றியது: அதிமுகவுக்கு டி.கே.ரங்கராஜன் பதில்

மக்களை பாதிக்கும் பல மசோதாக்களை பாஜகவுடன் சேர்ந்தே காங்கிரஸ் நிறைவேற்றியது: அதிமுகவுக்கு டி.கே.ரங்கராஜன் பதில்
Updated on
1 min read

மக்களை பாதிக்கும் பல மசோதாக் களை பாஜக உதவியுடன்தான் காங்கிரஸ் நிறைவேற்றியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னரும் மாநிலங்களைவை உறுப்பினருமான டி.கே.ரங்க ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இத்தாலிய காங்கிரஸ்தான் திமுகவுடன் கூட்டு சேர்ந்து நாட்டை சூறையாடியது’ என்று பாஜகவை விமர்சிக்காததற்கு அதிமுக விளக்கம் அளித்துள்ளது. 15-வது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்தேதான் மக்களை பாதிக்கும் பல மசோதாக்களை சட்டமாக்கியுள் ளன. மாநிலங்களவையில் காங்கிரஸ் மைனாரிட்டி கட்சியாக உள்ளதால் பாஜக ஆதரவு இல்லாமல் எந்த மசோதாவும் நிறைவேறாது.

பல லட்சம் ஓய்வூதியர்களை பாதிக்கக்கூடிய புதிய பென்ஷன் மசோதாவை காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து நிறைவேற்றின. அதேபோல் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, பெட்ரோல் விலையை எண்ணெய் கம்பெனிகளே தீர்மானிக்க வழிசெய்யும் மசோதாக்களும் பாஜக உதவியோடுதான் இயற்றப் பட்டன. ரிலையன்ஸ் கம்பெனிக் கான இயற்கை எரிவாயு (கோதா வரி படுகை) விலையை பாஜக ஆதரவோடு உயர்த்தியபோது இடதுசாரிகள் அதை விமர்சித்தின.

காங்கிரஸின் நவீன தாராள மய கொள்கைகளை பாஜக ஆதரித்ததற்கு இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன. எனவே, காங்கிரஸ் நாட்டை சூறையாடியதால்தான் பாஜகவை எதிர்க்கவில்லை என்று அதிமுக கூற முடியாது. இவ்வாறு அறிக்கையில் ரங்கராஜன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in