நெஸ்லே பால்பவுடரில் உயிருடன் புழுக்கள்: கோவை பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

நெஸ்லே பால்பவுடரில் உயிருடன் புழுக்கள்: கோவை பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்
Updated on
1 min read

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் பால்பவுடரில் உயிருடன் புழுக்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கேப் டிரைவர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த நெஸ்லேயின் நேன் புரோ3 பால்பவுடரை பரிசோதனை செய்ததில் அதில் உயிருடன் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.

கோவையில் உள்ள உணவுப் பாதுகாப்பு பிரிவின் மருந்து பரிசோதனை மையத்தின் முதற்கட்ட சோதனையில் நெஸ்லேயின் நேன் புரோ3 பால்பவுடரில் நுண்புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் உயிருடன் நுண் புழுக்கள் இருப்பதாலும், நுகர்வதற்கான தரநிலைகளின் தேவையை பால்பவுடர் பூர்த்தி செய்யவில்லை என்பதாலும் அது பாதுகாப்பற்றது என்று பெயர் கூற விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாம்பிளைக் கொடுத்த கேப் டிரைவர் தன் குழந்தை நெஸ்லே பால்பவுடரை எடுத்துக் கொண்ட பிறகு தோல் ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து பரிசோதனைக்கு அளித்துள்ளார்.

எனினும், இது குறித்து, அரசின் உணவுப் பாதுகாப்பு பரிசோதனை மையத்திலிருந்து ஒட்டுமொத்தமான, விரிவான அறிக்கை வருவதற்காக தாங்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in